நீலகிரி: உதகை அடுத்த கூடலூரில் ஊரடங்கை பயன்படுத்தி முட்டை ரூ.6.50க்கு விற்பனை செய்த கடையில் சோதனை மேற்கொண்ட வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறையினர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

உதகை கூடலூரில் சேவிடிபேட்டை மின்ஹா பல்பொருள் அங்காடியில் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பதாக கூடலூர் வட்டாசியார் அவர்களுக்கு புகார் வந்தது.
இதனை தொடர்ந்து, அந்த கடையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது அதிக விலைக்கு விற்பது உறுதியானது. இதனை தொடர்ந்து கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார், வட்டாட்சியர் சங்கீதா ராணி, வருவாய் அலுவலர் ஐயா ரமேஷ் மற்றும் கூடலூர் காவல்துறை ஆய்வாளர் ஐயா சிவக்குமார் அவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து பேசிய வருவாய்த்துறையினர், கூடலூர் மக்கள் இதுப்போல் அதிக விலைக்கு எங்கு பொருட்கள் விற்றாலும் புகார் தரலாம் என்று தெரிவித்தனா்.
இதனை தொடர்ந்து, அதிக விலைக்கு விற்பனை செய்த கடை மீது அதிரடி நடவடிக்கை எடுத்த வருவாய்த்துறையினர் மற்றும் வட்டாட்சியர் சங்கீதா ராணி அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நன்றியினை தெரிவித்தனர்.