கூடலூரில் ஊரடங்கை பயன்படுத்தி ரூ.6.50க்கு முட்டை விற்பனை செய்த கடைக்கு வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறையினர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை!

நீலகிரி: உதகை அடுத்த கூடலூரில் ஊரடங்கை பயன்படுத்தி முட்டை ரூ.6.50க்கு விற்பனை செய்த கடையில் சோதனை மேற்கொண்ட வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறையினர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

நீலகிரி: உதகை அடுத்த கூடலூரில் ஊரடங்கை பயன்படுத்தி முட்டை ரூ.6.50க்கு விற்பனை செய்த கடையில் சோதனை மேற்கொண்ட வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறையினர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். 

உதகை கூடலூரில் சேவிடிபேட்டை மின்ஹா பல்பொருள் அங்காடியில் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பதாக கூடலூர் வட்டாசியார் அவர்களுக்கு புகார் வந்தது.

இதனை தொடர்ந்து, அந்த கடையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது அதிக விலைக்கு விற்பது உறுதியானது. இதனை தொடர்ந்து கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார், வட்டாட்சியர் சங்கீதா ராணி, வருவாய் அலுவலர் ஐயா ரமேஷ் மற்றும் கூடலூர் காவல்துறை ஆய்வாளர் ஐயா சிவக்குமார் அவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து பேசிய வருவாய்த்துறையினர், கூடலூர் மக்கள் இதுப்போல் அதிக விலைக்கு எங்கு பொருட்கள் விற்றாலும் புகார் தரலாம் என்று தெரிவித்தனா். 

இதனை தொடர்ந்து, அதிக விலைக்கு விற்பனை செய்த கடை மீது அதிரடி நடவடிக்கை எடுத்த வருவாய்த்துறையினர் மற்றும் வட்டாட்சியர் சங்கீதா ராணி அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நன்றியினை தெரிவித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...