கோவை: தமிழகத்தில் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இணையதளம் மூலம் பதிவு செய்து அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களின் பெயர்கள் மட்டுமே இணையத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம், மருத்துவம், துக்க நிகழ்வு போன்றவற்றிற்கு வெளியே சென்று வர அரசாங்கம் e-Pass மின் அனுமதிச் சீட்டு வழங்குகிறது.
COVID19 e-pass திருமணம், மருத்துவம், துக்க நிகழ்வு செல்வதற்கு 8099914914 என்ற கைபேசி எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் மின்நுழைவுச் சீட்டிற்கான சம்பந்தப்பட்ட இணைப்பு உங்கள் அழைபேசி எண்ணிற்கு குறுந்தகவலாக வரும் அல்லது நீங்கள் நேரடியாக https://epasskki.in/ என்ற இணைப்பிற்கு செல்லலாம்.
1 . இணைப்பினை கிளிக் செய்து கைபேசி எண்ணை உள்ளிடவும்.
2 . உங்கள் கைபேசியில் வரப்பெறும் ஒருமுறை ரகசிய குறியீட்டு எண்ணை (OTP) உள்ளீடு செய்யவும்.
3 . மின்நுழைவுச் சீட்டிற்கான (e - Pass) விண்ணப்ப படிவம் தோன்றும்.
4 . விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யவும்.
5 . பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.
மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், e-pass இணையதளத்தில், சில மாவட்டங்களின் பெயர்கள் மட்டுமே இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.