பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு புனைந்த கோவை காவல்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம்

கோவை: பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு புனைந்த கோவை காவல்துறையின் நடவடிக்கைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மண்டல தலைவர் அ.அன்வர் உசேன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை: பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு புனைந்த கோவை காவல்துறையின் நடவடிக்கைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மண்டல தலைவர் அ.அன்வர் உசேன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா என்ற உயிர்க்கொள்ளி தொற்றுநோய் இந்தியாவிலும் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் இந்த நோயை பரவாமல் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள், அனைத்து ஜனநாயக சக்திகள் மற்றும் அனைத்து மக்களும் ஜாதி, மத பேதமின்றி உழைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தான் கொரோனா பரவுவதற்கு காரணம் என்று திட்டமிடப்பட்ட வெறுப்புப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்ற பாசிச வெறி கொண்ட இந்துத்துவா பயங்கரவாதிகள் மீது பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடர்ந்து வருகின்றனர். 

அதன் அடிப்படையில் காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஒரு சில நபர்களை கைது செய்துள்ளது. இந்த வழக்கினை திசை திருப்பவும், இந்துத்துவா அமைப்பினரை திருப்திப்படுத்தவும் கோவை மாவட்ட காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மீது 20.03.2020 அன்று துண்டுப்பிரசுரம் விநியோகித்து அதில் இந்து இயக்க தலைவர்களை விமர்சித்ததாகவும், அந்த துண்டு பிரசுரம் விநியோகித்ததிலிருந்து உந்துதல் ஏற்பட்டு தான் தப்லிக் ஜமாத்தினர் டெல்லி சென்றதாகவும் பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர். 

ஆனால், நடந்த உண்மை என்னவென்றால் டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிரான பாசிச பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கலவரத்தை நாடே அறிந்தது. அந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நடந்த கலவரத்தின் உண்மை தன்மையையும் மக்களுக்கு தெரியப்படுத்தவும், கலவரத்தை நடத்தியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி விநியோகம் செய்யப்பட்டது. 

ஆகையால், உண்மைக்கு புறம்பாக பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மீது பொய்வழக்கு புனைந்த காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன். கோவை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பொய்யான வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், வழக்கை திரும்பப் பெற வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...