கொரோனா தொற்றால் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை உட்பட நீலகிரி திருப்பூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த கொரோனோ தொற்றுடைய நபர்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இப்படி இன்றுடன் கோவையில் இந்த வைரஸ் தொற்றால் 126 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.இப்படி சிகிச்சை பெற்றவர்களில் ஏற்கனவே 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தநிலையில் தற்போது கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 6 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் இவர்கள் அனைவரும் 40 முதல் 50 வயது வரை உள்ள ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வைரஸ் தொற்று முற்றிலும் குணமடைந்து இருப்பதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தால் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதைத் தொடர்ந்து இவர்கள் 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் இவர்களுக்கு ஏதாவது உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...