கோவை மாவட்டத்தில் அனைத்து தரப்பினரும் பொதுவெளியில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் - மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மாவட்டத்தில் பொது வெளியில் அனைத்து தரப்பினரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மாவட்டத்தில் பொது வெளியில் அனைத்து தரப்பினரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவுறுத்தியுள்ளார். 



அத்தியாவசிய தேவைகளுக்காக வருபவர்கள்,அரசு அதிகாரிகள், காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் முகக்கவசம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், கொரோனா அறிகுறி இருந்தும் சிகிச்சை பெறாமல் இருப்பவர்கள் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டம் மற்றும் பொதுச் சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எச்சரித்துள்ளார் .

தன்னார்வலர்கள் சமைத்த உணவுகளை நேரடியாக விநியோகிப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, மதுக்கரை, அன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய ஊரக பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளிலும், மாநகரில் சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், பூமார்க்கெட், ஆர்.எஸ்.புரம், கே.கே.புதூர், கவுண்டம்பாளையம், சேரன்மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் இப்பகுதிகளில் உள்ளவர்கள் வெளியே வரவும், வெளியாட்கள் உள்ளே செல்லவும் தடை விதித்து ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...