ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தேயிலை விவசாயிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க கோரிக்கை

நீலகிரி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சிறு, குறு தேயிலை விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளதால் மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தென்னிந்திய பசுந்தேயிலை சாகுபடியாளர்களின் கூட்டமைப்பின் தலைவர் மஞ்சை வி.மாேகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சிறு, குறு தேயிலை விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளதால் மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தென்னிந்திய பசுந்தேயிலை சாகுபடியாளர்களின் கூட்டமைப்பின் தலைவர் மஞ்சை வி.மாேகன் கோரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் தேயிலை சாகுபடி செய்து வரும் நீலகிரி, இடுக்கி, நெல்லியாம்பதி, திருவனந்தபுரம் வால்பாறை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கரில் பணிபுரியும் சுமார் பத்து லட்சம் பணியாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சிறு, குறு தேயிலை விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளதால், மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தென்னிந்திய பசும்தேயிலை சாகுபடியாளர்களின் கூட்டமைப்பின் தலைவர் மஞ்சை வி.மாேகன் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் காேரிக்கை வைத்துள்ளார். 

தென் மாவட்டங்களில் இயங்கி வந்த 200க்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு விவசாயிகள் தேயிலை பறிக்கும் பணியும் நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், மத்திய அரசு விவசாயத்திற்கு அளிக்கப்பட்ட விலக்கு தேயிலைக்கும் பொருந்தும் என அறிவித்ததை தொடர்ந்து, தேயிலை விவசாயிகள் படிப்படியாக உகந்த பாதுகாப்புடன் கணிசமான அளவு தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இருப்பினும் சில பெரிய தேயிலை எஸ்டேட் நிறுவனங்கள் தாேட்டத்தில் வேலை செய்ய பணியாளர்ளை அனுப்ப தயக்கம் காட்டுவதால் பலரின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளதாக கூறினார். 



ஆகவே, சிறு குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாலும், இலை பறிக்காமல் தேயிலை தாேட்டங்கள் வீணாகும் சூழல் நிலவுவதாலும் மத்திய மாநில அரசுகள் நிவாரணத் தாெகையாக மாதம் பத்தாயிரம் வரை வழங்க நடவடிக்கைளை மேற்காெள்ள வேண்டும் என்று தென்னிந்திய பசுந்தேயிலை சாகுபடியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மஞ்சை.வி.மோகன் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...