தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கை வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கை வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 1075 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் கடந்த 25ம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவித்த 21 நாள் ஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

கொரோனா நோய்த்‌ தொற்றினை தடுக்கும்‌ நோக்கில்‌, பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டம்‌ 2005ன்‌ படியும்‌, குற்றவியல்‌ விசாரணை முறை சட்டப்‌ பிரிவு 144ன்‌ படியும்‌, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்‌ அனைத்து கட்டுப்பாடுகளும்‌ தொடரும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும்‌ காரணத்தினால்‌, தமிழ்நாட்டில்‌ உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ அனைத்தும்‌, அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம்‌ பருப்பு ஒரு லிட்டர் சமையல்‌ எண்ணெய்‌, அரிசி, குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும்‌ வழங்கப்படும்‌ அரிசி ஆகியவை நியாயவிலைக்‌ கடைகளில்‌ விலையின்றி வழங்கப்படும்‌.

கட்டடத்‌ தொழிலாளர்கள்‌ உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்‌ குடும்பங்களுக்கும்‌, குடும்பம்‌ ஒன்றுக்கு இரண்டாவது முறையாக 1,000 ரூபாய்‌ நிவாரண உதவி வழங்கப்படும்‌.

பிற மாநிலங்களைச்‌ சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம்‌ பருப்பு, ஒரு லிட்டர் சமையல்‌ எண்ணெய்‌ விலையின்றி வழங்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழ்நாட்டில்‌ காலை 6 மணி முதல்‌ மதியம்‌ 1 மணி வரையிலான காலத்தில், அடுமனைகள்‌ (பேக்கரி) இயங்க தடையில்லை என்பதையும்‌, ஏற்கனவே, உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி அடுமனைகளிலும்‌ பார்சல்‌ விற்பனை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்‌, சென்னை மாநகராட்சி பகுதியில்‌ உள்ள மக்கள்‌, கொரோனா நோய் தொடர்பான தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்‌ கொள்ள டெலிமெடிசின்‌ சொஸைட்டி ஆப்‌ இந்தியா நிறுவனத்தில்‌ பதிவு பெற்ற சிறந்த மருத்துவர்களைக்‌ கொண்டு, தொலை மருத்துவ முறை மூலம்‌ தங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...