நீலகிரி: குன்னூர் பர்லியார் பஞ்சாயத்து சார்பில் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய பழங்குடி குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள குரும்பாடி, வடுகன் தாேட்டம் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களுக்கு பர்லியார் பஞ்சாயத்து சார்பில் உணவு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு தலைமை தாங்கினார். பர்லியார் பஞ்சாயத்து தலைவர் சுசீலா முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு பகுதியில் வாழ்ந்து வரும் சுமார் 500க்கும் மேற்பட்ட பழங்குடிகளுக்கு இலவசமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
144 தடை உத்தரவு அமலில் இருக்கும் வரை பொதுமக்களுக்கு இதுபோன்ற இலவச உதவிகள் வழங்கப்படும் என்று பர்லியார் பஞ்சாயத்து துணை தலைவரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான தீனதயாள் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பர்லியார் பஞ்சாயத்து செயலாளர் செந்தில் குமார் மற்றும் கணிப்பாெறியாளர் ஆல்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.