கோவை தீத்திபாளையம்‌ ஊராட்சியில்‌ மலைவாழ்‌ மக்களுக்கு விலையில்லா காய்கறிகளை வழங்கினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: கோவை மாவட்டம்‌, தொண்டாமுத்தூர்‌ ஊராட்சி ஒன்றியம்‌ தீத்திபாளையம்‌ ஊராட்சியில்‌ இன்று (09.04.2020) மலைவாழ்‌ மக்களுக்கு விலையில்லா காய்கறிகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ வழங்கினார்‌.

கோவை: கோவை மாவட்டம்‌, தொண்டாமுத்தூர்‌ ஊராட்சி ஒன்றியம்‌ தீத்திபாளையம்‌ ஊராட்சியில்‌ இன்று (09.04.2020) மலைவாழ்‌ மக்களுக்கு விலையில்லா காய்கறிகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ வழங்கினார்‌. 



இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்‌ எட்டிமடை எ.சண்முகம்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகன்‌, ஊரக வளர்ச்சி முகமையின்‌ திட்ட இயக்குநர்‌ ரமேஸ்குமார்‌, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்‌ மதுமதி விஜயகுமார்‌, வருவாய்‌ கோட்டாட்சியர்‌ தனலிங்கம்‌ மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.



இதையடுத்து, கோவை செம்மேடு பகுதியில்‌ இன்று(09.04.2020) தீயணைப்பு வாகனம்‌ மூலம்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும்‌ பணியினை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டார்‌.



மேலும், கோவை மாவட்டத்தில்‌ திடீரென பெய்த மழையால்‌ பேரூர்‌ வட்டம்‌, மத்தவராயபுரம்‌ குறிஞ்சி நகர்‌ பகுதியில்‌ பாதிப்பிற்குள்ளான பகுதிகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. 



இதனை தொடர்ந்து, கோவை மாவட்டம்‌, பேரூர்‌ வட்டம்‌, மத்வராயபுரம்‌ சிங்பதி மழைவாழ்‌ மக்கள்‌ குடியிருப்பில்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ மலைவாழ்‌ மக்களுக்கு நிவாரணப்பொருட்களாக விலையில்லா காய்கறிகளை வழங்கினார்‌. 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகன்‌, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்‌ திட்ட இயக்குநர்‌ ரமேஷ்குமார்‌, தொண்டாமுத்தூர்‌ ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்‌ மதுமதி விஜயகுமார்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...