நீலகிரி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து இன்று வரை தங்களது கிராம பகுதிகளை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கும் நடிகர் விஜய் மக்கள் இயக்க இளைஞர்களின் செயல்பாடு அந்த கிராமத்தினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

உதகை அருகே எமரால்டு பகுதியில் உள்ள அண்ணா நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் தங்கள் கிராமங்களை தூய்மையாகவும் விழிப்புணர்வுடன் இருக்க ஊரின் நுழைவு பகுதியில் சோதனை சாவடி அமைத்து வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப் படாதவாறு பாதுகாத்து வருகின்றனர்.
குறிப்பாக, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கபசுர குடிநீர் இரண்டு நாளுக்கு ஒரு முறை மற்றும் காலை, மாலை இருவேளை கிருமி நாசினி தெளித்து தங்கள் கிராம புறத்தை தூய்மையாக வைத்துள்ளனர் இந்த இளைஞர்கள்.
மேலும், தங்கள் கிராமப்பகுதி மட்டுமல்லாமல் பிற பகுதிகளில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இந்த இளைஞர்கள் முன்னெடுத்துவரும் செயல்பாடுகள் அப்பகுதியில் உள்ள கிராமத்தினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.