திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ளக் கூடிய வகையில் பாதுகாப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் 2 பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், திருப்பூரில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் கண்காணிப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அதேபோல, திருப்பூரில் 50 பேருக்கு மேல் சோதனை முடிவு வரவேண்டியிருந்த நிலையில் கிட்டத்தட்ட அனைவருக்கும் பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டதாகவும் இன்னும் சில பேருக்கு மட்டுமே பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளதாக தெரிவித்த அவர், இன்னும் ஓரிரு தினங்களில் முடிவுகள் வந்துவிடும் என தெரிவித்தார்.