காருண்யா டிரஸ்ட் வளாகத்தை தமிழக அரசு கொரோனா சிகிச்சை பிரிவு ஏற்படுத்தி கொள்ளலாம் - டாக்டர் பால் தினகரன்

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள காருண்யா டிரஸ்ட் வளாகத்தை கொரோனா சிகிச்சை பிரிவு ஏற்படுத்தி கொள்ள தமிழக அரசிற்கு கோவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் டாக்டர் பால்தினகரன் வழங்கியுள்ளார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள காருண்யா டிரஸ்ட் வளாகத்தை கொரோனா சிகிச்சை பிரிவு ஏற்படுத்தி கொள்ள தமிழக அரசிற்கு கோவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் டாக்டர் பால்தினகரன் வழங்கியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பராவமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்கள் சமூக விலகலை கடை பிடிக்க வேண்டி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள காருண்யா டிரஸ்ட் வளாகத்தை கொரோனா வைரஸ் தாக்கும் நோயாளிகளை தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தி கொள்ள காருண்யா பல்கலைகழக வேந்தர் டாக்டர் பால் தினகரன் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து கல்லூரியின் நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்:-

உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, பாதிப்பிற்குள்ளாகி இருப்பவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் தேவையான வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கென மத்திய மாநில அரசுகளுக்கு உதவும் விதமாக காருண்யா பல்கலை கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் பால் தினகரன் அவர்கள்,, காருண்யா கல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமான பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள காருண்யா டிரஸ்ட் வளாகத்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர், தம்மை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு, அரசு சார்பில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளார்.

காருண்யா டிரஸ்ட் வளாகத்தில் 400 படுக்கை வசதிகள் ஆண், பெண்களுக்கென தனித்தனியாக நல்ல சூழலில் உள்ளதாகவும் மேலும் நல்ல வசதிகளுடன் உணவு கூடங்கள்அமைக்கப்பட்டுள்ளதால் இங்கு நோயாளிகள் நல்ல முறையில் பராமரிக்க வசதிகள் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...