கோவை: வால்பாறை பகுதியில் மக்கள் அதிக அளவில் கூடும் மார்க்கெட் பகுதியில் அரசு அனுமதித்துள்ள மளிகை, பால், காய்கறி, மருந்து கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறை பகுதியில் மக்கள் அதிக அளவில் கூடும் மார்க்கெட் பகுதியில் அரசு அனுமதித்துள்ள மளிகை, பால், காய்கறி, மருந்து கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்படுகின்றன. இதனால் மார்க்கெட் பகுதியில் மக்கள் பொருட்கள் வாங்க அதிகம் கூடுவதால் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் விரைவில் நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், காவல் துறை ஒலி பெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் அதை கண்டு கொள்வதில்லை. இதனால் காவல்துறை மூலம் நகராட்சி சட்டத்தை மீறும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.