கோவை: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான சிகிச்சை ஏற்பாடுகளும் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவையில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு இ எஸ் ஐ மருத்துவமனையில சிகிச்சை பெற்று வந்த 26 வயது மதிப்புடைய ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த மாணவி தற்போது சிகிச்சைக்குப்பின் நலமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக போத்தனூர் ரயில்வே பெண் மருத்துவர், அவரது 10 மாத குழந்தை, மற்றும் அவரது வீட்டில் பணிப்புரிந்த பணியாளர் மற்றும் திருப்பூரை சேர்ந்த 57 வயதுடைய நபர் ஆகிய 5 பேரும் வீட்டுக்கு பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு கடந்த 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தற்போது மீண்டும் கொரோனா அறிகுறிகள் வராத காரணத்தால் ஐந்து பேரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இந்த ஐந்து பேரும் 28 நாள்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், உடல்நிலையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, 300 பேருக்கு கோவையில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டதில் 228 பேருக்கு தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் இஎஸ்ஐ மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் கூறும்போது:-
கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் தொடர்பில் இருப்பவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவக்கூடாது என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது.
கொரோனா தொற்றை இரண்டாம் கட்டத்திலேயே வைத்திருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க இஎஸ்ஐ மருத்துவமனை 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
கொரோனா சிகிச்சைக்கான உபகரணங்கள் தேவைக்கேற்ப அளவு நம்மிடம் உள்ளது. பொதுமக்கள் 144 தடை உத்தரவை மதித்து நடந்து கொள்ள வேண்டும். அதை மீறுபவர்கள் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கும். அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் 13 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யும் அளவிற்கு கட்டிடங்களும், வளாகங்களும் தயார் நிலையில் உள்ளது. மேலும், கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் 140 வெண்டிலேட்டர் தயார் நிலையிலும், கூடுதலாக வெண்டிலேட்டர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இன்னும் இரண்டு நாட்களில் நமக்கு வந்து சேரும்.
மேலும், வருகின்ற பத்தாம் தேதிக்கு மேல் முதல்வர் அறிவித்த ரேப்பிட் டெஸ்ட் கருவி மூலம் பரிசோதனையை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
கொரோனா பாதிப்புக்கு உள்ளான பகுதியில் இரண்டு கிலோ மீட்டருக்கு கிருமி நாசினி மற்றும் மருத்துவர்கள் மூலம் பரிசோதிக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு படியாக அன்னூர், ஆனைமலை மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் பணிகள் நிறைவடைந்துள்ளன.
நேற்றைக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட மதுக்கரை, குனியமுத்தூர், கரும்புக்கடை , போத்தனூர் போன்ற பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஈ எஸ் ஐ மருத்துவனையில் 25 மருத்துவர்களும் 20 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கொரோனா வார்டில் சுழற்சி முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.