கோவையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் கள் விற்பனை படுஜோர்..! 90 லிட்டர் கள் பாட்டில்கள் பறிமுதல் - 12 பேர் கைது

கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், கள் விற்பனை செய்த 12 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 90 லிட்டர் கள் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், கள் விற்பனை செய்த 12 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 90 லிட்டர் கள் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ள நிலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் மதுபானம் கிடைக்காமல் குடிமகன்கள் திண்டாடி வருகின்றனர்.

மேலும், ஊரடங்கு உத்தரவுகளை மீறி மதுபானங்களை பதுக்கி கள்ள சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், குடிமகன்கள் கள்ளை அருந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையையும் மீறி மாவட்டம் முழுவதும் கள் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே குடிமகன்கள் கள் விற்பனை செய்யும் பகுதிகளை தேடிச்சென்று குடித்து வருகின்றனர்.

ஒரு லிட்டர் கள் 50 ரூபாய் என இருந்த நிலையில் மதுபானம் கிடைக்க பெறாத காரணத்தால் ஒரு லிட்டர் கள் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கள் விற்பனை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து சென்று தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அப்போது, கோவை ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம், சிங்காநல்லூர், இருகூர், சின்னியம்பாளையம் ஆகிய பகுதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 22 லிட்டர் கள் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், கள் விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோல, புறநகர் பகுதிகளான செட்டிபாளையம், காமநாயக்கன்பாளையம், சிறுமுகை மேட்டுபாளையம், தொண்டாமுத்தூர், அன்னூர் ஆகிய பகுதிகளில் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட 68 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பதுக்கி வைத்து விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...