கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டின் மாடியில் ஜெபக்கூட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு!

கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டின் மாடியில் ஜெபக்கூட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டின் மாடியில் ஜெபக்கூட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் வழிபாடுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நேற்று கோவை கணபதி சுபாஷ் நகரில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் தடையை மீறி ஜெபக்கூட்டம் நடத்துவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 15 பேர் ஒன்றுகூடி பிரார்த்தனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து, பிரார்த்தனை நடத்திய பாதிரியார் ஜெபஸ்டின் அந்தோணிராஜ் மற்றும் மெர்சி ஜெபமாலை ராஜ் ஸ்டாலின் புதிய ராஜ் இயேசுதாஸ் ஆகியோர் மீது போலீசார் தடை உத்தரவை மீறி ஜெபக்கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...