கோவை: ஊரடங்கு உத்தரவால் மக்கள் நடமாடுவதை தடுக்க மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி கடைகளை மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ இன்று துவங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து டெல்லி சென்று திரும்பிய 20 பேருக்கு கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மக்கள் வெளியே நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது, அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மார்க்கெட் கூட மூடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேட்டுப்பாளையம் நகராட்சி நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனையை துவங்கியுள்ளது. இந்த விற்பனையை இன்று மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ சின்னராஜ் துவக்கி வைத்தார்.

100 ரூபாய் விலைக்கு விற்கப்படும் இந்த தொகுப்பில் ஒரு கிலோ தக்காளி, அரை கிலோ வெங்காயம், கத்தரிக்காய், புடலங்காய், பச்சைமிளகாய், தேங்காய், கீரை, கொத்தமல்லி, கருவேப்பிலை, வெண்டைக்காய் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டது.
இதனை பயன்படுத்தி கொண்டு பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க நகராட்சி ஆணையாளர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.