கொரோனா நிவாரண பணிக்காக அரிசி மூட்டைகளை சுமந்த கோவை வட்டாட்சியர் - பொதுமக்கள் பாராட்டு!

கோவை: கொரோனா நிவாரண பணிக்காக கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ள அரிசி மூட்டைகளை வட்டாட்சியர் தனது தோளில் சுமந்து சென்ற வீடியோ காட்சிகள் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

கோவை: கொரோனா நிவாரண பணிக்காக கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ள அரிசி மூட்டைகளை வட்டாட்சியர் தனது தோளில் சுமந்து சென்ற வீடியோ காட்சிகள் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், உணவின்றி தவிக்கும் வட இந்தியர்கள் மற்றும் சாலைகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு சமுதாய கூடம் அமைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அரசின் உணவளிக்கும் இந்த முயற்சிக்கு ஆதரவாக கோவை கனரக லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக 750 கிலோ அரிசியும், இதே போல ஆம்னி உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா அசோசியேசன் 750 கிலோ அரிசியும், கோவை மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் 2250 கிலோ அரிசியையும் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் வழங்கினர். 

இந்த அரிசிகள் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரிசை மூட்டைகளை இறக்கி வைக்கும் பணி நடைபெற்ற போது, வடக்கு வட்டாட்சியர் மகேஷ்குமார் அரிசி மூட்டைகளை தனது தோளில் சுமந்து சென்றார். வட்டாட்சியரின் இந்த செயல் பாராட்டை பெற்றிருப்பதோடு, இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...