கோவை: கொரோனா நிவாரண பணிக்காக கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ள அரிசி மூட்டைகளை வட்டாட்சியர் தனது தோளில் சுமந்து சென்ற வீடியோ காட்சிகள் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், உணவின்றி தவிக்கும் வட இந்தியர்கள் மற்றும் சாலைகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு சமுதாய கூடம் அமைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அரசின் உணவளிக்கும் இந்த முயற்சிக்கு ஆதரவாக கோவை கனரக லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக 750 கிலோ அரிசியும், இதே போல ஆம்னி உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா அசோசியேசன் 750 கிலோ அரிசியும், கோவை மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் 2250 கிலோ அரிசியையும் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் வழங்கினர்.
இந்த அரிசிகள் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரிசை மூட்டைகளை இறக்கி வைக்கும் பணி நடைபெற்ற போது, வடக்கு வட்டாட்சியர் மகேஷ்குமார் அரிசி மூட்டைகளை தனது தோளில் சுமந்து சென்றார். வட்டாட்சியரின் இந்த செயல் பாராட்டை பெற்றிருப்பதோடு, இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.