கோவை கத்தோலிக்க மறை மாவட்டம் சார்பாக கொரோனா வைரஸ் முதல்வர் பொது நிவாரண நிதியாக ரூபாய் 25 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது

கோவை கத்தோலிக்க மறை மாவட்டம் சார்பாக கொரோனா வைரஸ் முதல்வர் பொது நிவாரண நிதியாக ரூபாய் 25 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது

கோவை: கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த நோயை கட்டுப்படுத்தும் விதமாக வரும் 14ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டு நன்கொடைகள் பெறப்படுகிறது. இதற்கு தனிநபர்கள்,அரசியல் கட்சிகள்,தொழில் நிறுவனங்கள்,என பலரும் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை கத்தோலிக்க மறை மாவட்டம் சார்பாக பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் ரூபாய் 25 இலட்சத்திற்கான காசோலையை கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசமணியிடம் இன்று வழங்கப்பட்டது.

இதில் மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை ஜான் ஜோசப்,மறை மாவட்ட முதன்மை குரு மை ஜார்ஜ் தனசேகர்,மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை பிரான்சிஸ் மற்றும் சமூக சேவா சங்க இயக்குனர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இது குறித்து பிஷப் தாமஸ் அக்குவைனஸ் கூறுகையில், கோவை மறை மாவட்டத்திற்கு உட்பட்ட 74 ஆலயங்களிலும் அந்தந்த அருட்தந்தையர்களின் தலைமையில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்கள் வழங்கி வருவதாகவும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்கள் மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலை பின்பற்றி நடக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...