வடமாநில இளைஞர்களை வேறு இடத்திற்க்கு மாற்ற வேண்டும். உப்பிலிபாளையம் பகுதி மக்கள் கோரிக்கை.
கோவை: கொரோனா தொற்று பராவமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சாலையில் சுற்றி திரிபவர்கள்,
கைவிடப்பட்டவர்களை, அரசு கட்டிடங்கள் மற்றும் தனியார் இடங்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளது.
இந்நிலையில் தங்க இடமின்றி சுற்றி திரிந்த வடமாநில இளைஞர்களை உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கபட்டு உள்ளனர். இங்கு தங்க வைக்கபட்டு உள்ள வடமாநில இளைஞர்கள் அப்பகுதி மக்களுக்கு தொந்தரவுகள் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதால், அவர்களை அங்கிருந்து மாற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளனர்.
கூட்டமாக செல்ல அனுமதி மறுக்கபட்டதால், அவர்கள் சார்பாக ஒருவரை மட்டும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
வடமாநில இளைஞர்கள் செய்யும் இடையூறுகள் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியரை தொடர்பு கொண்டு பேசினார்.வடமாநில இளைஞர்கள் இன்று இரவுக்குள் வேறு இடதிற்க்கு மாற்றம் செய்யபடுவார்கள் என மாவட்ட ஆட்சியர் கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.