தனிமனித இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி கோவை காவலர் பாடிய விழிப்புணர்வு பாடல்; சமூக வலைதளங்களில் வைரல்!

கோவை: கொரோனா பாதிப்பில் தமிழகம் தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் விழிப்புணர்வாக தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கோவை போலீசார் பாடிய பாடல் பொதுமக்கள் மத்தியிலும் சமூக வலை தளங்களிலும் வரவேற்பை பெற்றுள்ளது.


கோவை: கொரோனா பாதிப்பில் தமிழகம் தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் விழிப்புணர்வாக தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கோவை போலீசார் பாடிய பாடல் பொதுமக்கள் மத்தியிலும் சமூக வலை தளங்களிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோய் பரவலை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தனிமனித இடைவெளி பின்பற்றப்பட்டு வருகிறது.

இருப்பினும் ஒரு சில பகுதிகளில் பொதுமக்கள் விழிப்புணர்வின்றி தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளையும் அதே சமயத்தில் நூதன முறையில் தண்டனைகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று கோவையில் இரண்டாம் நிலை காவலர் ஒருவர் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பாடல் பாடி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (35). இரண்டாம் நிலை காவலரான இவர் கோவை மாவட்டத்தில் உள்ள கோவைப்புதூர் 4ம் பட்டாலியனில் பணிபுரிந்து வருகிறார். 2016ம் ஆண்டு பணியில் சேர்ந்த புஷ்பராஜ் பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

இந்த நிலையில், இவர் பணியின் போது பொதுமக்கள் போதுமான தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் நடப்பதை கண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடலை பாடியுள்ளார். இது பொதுமக்கள் மத்தியிலும் காவல்துறையினர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது;- 

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் உயிரும் முக்கியம் என்ற நோக்கில் இந்த விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளேன். மேலும், இந்த பாடலை நான் பொழுதுபோக்கிற்காக பாடவில்லை. தமிழ்நாடு காவல்துறையின் பணிகளை கொண்டு பொது மக்கள் விழிப்படைய வேண்டும் என்ற நோக்கில் பாடியுள்ளேன். ஆகவே, அரசின் விதிகளுக்குட்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து கொண்டால் இந்த வைரஸ் நோயில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...