கோவை: கொரோனா அச்சத்தின் காரணமாக அவசர தேவைக்காக மட்டுமே வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்துவிட்டு, காட்டை விட்டு வெளியே வர வேண்டும் என வால்பாறையில் வாழும் ஆயிரக்கணக்கான ஆதிவாசி மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை: கொரோனா அச்சத்தின் காரணமாக அவசர தேவைக்காக மட்டுமே வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்துவிட்டு, காட்டை விட்டு வெளியே வர வேண்டும் என வால்பாறையில் வாழும் ஆயிரக்கணக்கான ஆதிவாசி மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் அடர்ந்த வனப்பகுதியில் காடர், இருளர், புலையர், முதுவர் இன மக்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செட்டில்மென்ட் பகுதியில் வசித்துவருகின்றனர். சுமார் 1000 பேர் வசித்து வருகின்ற பகுதிக்கு சாலை வசதிகள் கிடையாது. அத்தியாவசிய தேவைகளான அரிசி, மளிகை பொருட்கள், மருத்துவம் போன்றவற்றிற்காக பல கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதியை கடந்து வால்பாறைக்குக்கு தான் வந்து செல்லவேண்டும்.
தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மாவட்ட வன அலுவலர், ஆரோக்கியராஜ் சேவியர் உத்திரவின் பேரில் அங்குள்ள ஆதிவாசி மக்களுக்கு விழிப்புணர்வினை வனஅதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

வனசரகர் வனச்சரகர் பயிற்சி அலுவலர்கள், வனவர் முனியான்டி தலைமையில் 30க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் மனித மோதல் தடுப்பு காவலர்கள், அட்டகட்டி பயிற்சி மையத்தினர் அனைவரும் வால்பாறையில் 7வது டிவிசன், கல்லார் செட்டில்மென்ட். நல்லமுடி. சங்கரன்குடி செட்டில்மென்ட் உட்பட பல்வேறு செட்டில்மென்ட் பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள ஆதிவாசி மக்களை சந்தித்து கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் மிகவும் அவசர தேவைக்காக மட்டுமே வனத்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு காட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.