ஆதிவாசி மக்கள் அவசர தேவைக்காக மட்டுமே காட்டை விட்டு வெளியே வர வேண்டும் - வனத்துறையினர் அறிவுறுத்தல்

கோவை: கொரோனா அச்சத்தின் காரணமாக அவசர தேவைக்காக மட்டுமே வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்துவிட்டு, காட்டை விட்டு வெளியே வர வேண்டும் என வால்பாறையில் வாழும் ஆயிரக்கணக்கான ஆதிவாசி மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


கோவை: கொரோனா அச்சத்தின் காரணமாக அவசர தேவைக்காக மட்டுமே வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்துவிட்டு, காட்டை விட்டு வெளியே வர வேண்டும் என வால்பாறையில் வாழும் ஆயிரக்கணக்கான ஆதிவாசி மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் அடர்ந்த வனப்பகுதியில் காடர், இருளர், புலையர், முதுவர் இன மக்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செட்டில்மென்ட் பகுதியில் வசித்துவருகின்றனர். சுமார் 1000 பேர் வசித்து வருகின்ற பகுதிக்கு சாலை வசதிகள் கிடையாது. அத்தியாவசிய தேவைகளான அரிசி, மளிகை பொருட்கள், மருத்துவம் போன்றவற்றிற்காக பல கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதியை கடந்து வால்பாறைக்குக்கு தான் வந்து செல்லவேண்டும். 

தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மாவட்ட வன அலுவலர், ஆரோக்கியராஜ் சேவியர் உத்திரவின் பேரில் அங்குள்ள ஆதிவாசி மக்களுக்கு விழிப்புணர்வினை வனஅதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.



வனசரகர் வனச்சரகர் பயிற்சி அலுவலர்கள், வனவர் முனியான்டி தலைமையில் 30க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் மனித மோதல் தடுப்பு காவலர்கள், அட்டகட்டி பயிற்சி மையத்தினர் அனைவரும் வால்பாறையில் 7வது டிவிசன், கல்லார் செட்டில்மென்ட். நல்லமுடி. சங்கரன்குடி செட்டில்மென்ட் உட்பட பல்வேறு செட்டில்மென்ட் பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள ஆதிவாசி மக்களை சந்தித்து கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் மிகவும் அவசர தேவைக்காக மட்டுமே வனத்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு காட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...