கோவை: கோவையில் விதிமுறைகளை மீறி உணவு உண்பதற்கு அனுமதித்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து கடைகள் இயங்கக் கூடாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவங்கள் பார்சல்கள் மட்டுமே வழங்க வேண்டும் என உத்தரவு உள்ள நிலையில், கோவை மாவட்டம் மதுக்கரை குரும்பபாளையம் பகுதியில் உணவு உண்பதற்கு அனுமதித்த அம்மன் உணவகத்திற்கு விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் சீல் வைக்கப்பட்டது.
அந்த பகுதியில் ஆய்வு செய்ய சென்றபோது உணவகத்தின் உள்ளே சிலர் சாப்பிட்டுக் கொண்டு இருந்ததை கண்ட அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.