கோவை: வால்பாறை அடுத்த காஞ்சமலை தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களை கட்டாயமாக வேலைக்கு வரச்சொல்லி வலியுறுத்தியதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ளது வெள்ளமலை காஞ்சமலை எஸ்டேட் இது பெரிய கருமலை தேயிலை தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமானது. இந்த தேயிலைத் தோட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ளது. மேலும் கொரானா வைரஸ் சமூக பரவல் ஏற்படாமல் இருப்பதற்காக சமூக இடைவெளி இருக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாக தேயிலை தோட்டப்பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காஞ்சமலை தேயிலை தோட்டத்தில் இன்று தொழிலாளர்களை கட்டாயமாக வேலைக்கு வரச்சொல்லி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் ராஜன் தேயிலை தோட்டப்பணிகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளதாக கூறினார். இதையடுத்து தொழிலாளர்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்ததோடு இறுதியில் விருப்பப்பட்டவர்கள் வேலைக்குச் செல்லலாம் என்று கூறினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.