வால்பாறை அருகே தேயிலை தொழிலாளர்களை கட்டாயமாக வேலைக்கு வரச்சொல்லும் நிர்வாகத்தை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

கோவை: வால்பாறை அடுத்த காஞ்சமலை தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களை கட்டாயமாக வேலைக்கு வரச்சொல்லி வலியுறுத்தியதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: வால்பாறை அடுத்த காஞ்சமலை தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களை கட்டாயமாக வேலைக்கு வரச்சொல்லி வலியுறுத்தியதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ளது வெள்ளமலை காஞ்சமலை எஸ்டேட் இது பெரிய கருமலை தேயிலை தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமானது. இந்த தேயிலைத் தோட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ளது. மேலும் கொரானா வைரஸ் சமூக பரவல் ஏற்படாமல் இருப்பதற்காக சமூக இடைவெளி இருக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாக தேயிலை தோட்டப்பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது.



இந்த நிலையில், காஞ்சமலை தேயிலை தோட்டத்தில் இன்று தொழிலாளர்களை கட்டாயமாக வேலைக்கு வரச்சொல்லி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



இதனை தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் ராஜன் தேயிலை தோட்டப்பணிகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளதாக கூறினார். இதையடுத்து தொழிலாளர்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்ததோடு இறுதியில் விருப்பப்பட்டவர்கள் வேலைக்குச் செல்லலாம் என்று கூறினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...