ஈஷாவில்‌ ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை வதந்தி பரப்புவோர்‌ மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்‌, ஈஷா கோரிக்கை

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில்‌ உள்ள ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ்‌ தொற்றுக்கான அறிகுறி இல்லை. எனவே, இதுதொடர்பாக ஆதாரமின்றி வதந்தி பரப்புவோர்‌ மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறோம்‌, என ஈஷா யோகா மையம் சார்பாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில்‌ உள்ள ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ்‌ தொற்றுக்கான அறிகுறி இல்லை. எனவே, இதுதொடர்பாக ஆதாரமின்றி வதந்தி பரப்புவோர்‌ மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறோம்‌, என ஈஷா யோகா மையம் சார்பாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்:-

உலக சுகாதார நிறுவனம்‌ கோவிட்‌ - 19 வைரஸை ஒரு நோய்‌ தொற்று (Pandemic) என அறிவிப்பதற்கு முன்பாகவும்‌, மத்திய, மாறில அரசுகள்‌ ஊரடங்கு உத்தரவு மற்றும்‌ பயண தடைகளை விதிப்பதற்கு பல நாட்கள்‌ முன்பாகவே ஈஷாவுக்கு வந்த வெளிநாட்டினருக்கு சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து அதை தீவிரமாக செயல்படுத்தினோம்‌.

முன்னெச்சரிக்கை நடவழக்கையாக, சீனா, ஜப்பான்‌, சிங்கப்பூர்‌ உள்ளிட்ட கோவிட்‌ -19 வைரஸ்‌ தாக்கிய நாடுகளை சேர்ந்கோர்‌ ஈஷா யோகா மையத்துக்கு வர வேண்டாம்‌ என்று வேண்டுகோள்‌ விடுத்தோம்‌. மேலும்‌, கோவிட்‌ - 19 வைரஸ்‌ தாக்கிய நாடுகளுக்கு சென்றவர்கள்‌, அந்த நாடுகளின்‌ விமானநிலையங்கள்‌ வழியாக வந்தவர்களும்‌ ஈஷாவுக்கு வர வேண்டாம்‌ என்று தெரிவித்து இருந்தோம்‌.

ஈஷாவுக்கு வந்த மற்ற வெளிநாட்டினர்கள்‌ கட்டாயம்‌ 28 நாட்கள்‌ தனிமையில்‌ இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கட்டாய மருத்துவ பரிசோதனை மற்றும்‌ உடல்ரீதியான இடைவெளி (social distancing) நெறிமுறைகளை (Protocols) தற்போது வரை ஈஷா பின்பற்றி வருகிறது.

ஈஷா யோகா மையத்தில்‌ தங்கி இருப்பவர்கள்‌ மற்றும்‌ தன்னார்வலர்களுக்கு சாதாரண நாட்களில்‌ கூட கடுமையான மருத்துவ மற்றும்‌ சுகாதார நெறிமுறைகள்‌ பின்பற்றப்பட்டு வருகிறது. இப்போது அவர்கள்‌ 2 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாக்கி உள்ளோம்‌. ஈஷா மையத்தில்‌ தங்கி பாதுகாப்பு பணி, தூய்மை பணி மற்றும்‌ பிற களப்‌ பணிகளில்‌ ஈடுபடும்‌ அனைத்து ஊழியர்களுக்கும்‌ இந்த நெறிமுறை பொருந்தும்‌. 

மேலும், ஈஷா வளாகத்தின்‌ பல இடங்களில்‌ கையை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும்‌ கிருமிநாசனிகளும்‌ (Hand sanitizers) வைக்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி மாதத்தில்‌ இருந்தே மாநில சுகாதார அதிகாரிகள்‌ ஈஷா யோகா மையத்துக்கு தொடர்ந்து வருகை தந்து மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு வருகின்றனர்‌. இதுவரை இங்கு தங்கியுள்ள ஒருவருக்கு கூட கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

எனவே, இதுதொடர்பாக, ஆதாரமின்றி வதந்தி பரப்புவோர்‌ மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறோம்‌.

ஈஷா யோகா மையம்‌ அனைத்து விதமான மருத்துவ நெறிமுறைகளை அமல்படுத்தும்‌ திறனுடன்‌ இருப்பது மட்டுமின்றி, தனிமைப்படுத்துதல்‌ மற்றும்‌ உடல்ரீதியான இடைவெளியை ஆரம்பத்திலேயே அமல்படுத்துவிட்டது. 

கொரோனா தொற்றால்‌ பாதுக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஈஷா வளாகத்தை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம்‌ என ஈஷா சமீபத்தில்‌ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...