கோவை தனியார் நுண்ணுயிரியல் ஆய்வகத்திற்கு கொரோனா வைரஸ் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ய அரசு ஒப்புதல்

கோவை: கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்ய இரண்டு தனியார் ஆய்வகங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இரண்டு ஆய்வகங்களில் ஒன்றாக கோவையில் உள்ள மைக்ரோபயாலஜி நுண்ணுயிரியல் ஆய்வகத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மற்றொரு சோதனை ஆய்வகம் சென்னையில் உள்ள YRG ஆய்வக்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை:கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்ய இரண்டு தனியார் ஆய்வகங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பரிசோதனையானது சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் வைத்து பரிசோதிக்கப்பட்டு வந்தது. இது  கால விரயத்தை ஏற்படுத்துவதால் கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக கொரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டது. 

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்ய இரண்டு தனியார் ஆய்வகங்களுக்கு தமிழக அரசு இன்று அனுமதி அளித்துள்ளது. 

இரண்டு ஆய்வகங்களில் ஒன்றாக கோவையில் உள்ள மைக்ரோபயாலஜி நுண்ணுயிரியல் ஆய்வகத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மற்றொரு சோதனை ஆய்வகம் சென்னையில் உள்ள YRG ஆய்வக்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கோவை மைக்ரோபயாலஜி நுண்ணுயிரியல்  ஆய்வக உயர்

அதிகாரியிடம் பேசும் போது, பரிசோதனை செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் ஓரிரு நாட்களில் பணிகள் நிறைவடைந்து கொரோனா பரிசோதனை செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.  

மேலும், பரிசோதனைக்கு வருவதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் ஆய்வகத்தை தொடர்பு கொண்டு வர வேண்டும் என்றனர். 

அதேசமயம், இந்த சோதனைக்கான செலவு குறித்து தகவல் தெரிவிக்கப்படாத நிலையில், அது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட செலவில் அல்லது இணையாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சோதனைக்கான செலவுகள் குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் இரத்த மாதிரிகள் நுண்ணுயிரியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் அல்லது ஆர்.எஸ்.புரம் தலைமையகத்தில் சேகரிக்கப்படும். இதனை தொடர்ந்து, இரத்த மாதிரிகள் பரிசோதனை முடிவுகளுக்காக நிறுவனத்தின் வீரகேரளம் செயலாக்க மையத்திற்கு அனுப்பப்படும்.

தொடர்ந்து, வீரகேரளம் செயலாக்க மையத்தில் பரிசோதனைக்காக பெறப்பட்ட இரத்த மாதிரிகளின் முடிவுகள் 5 அல்லது 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கும் அரசு பரிசோதனை மையத்தின் பணிச்சுமையை எளிதாக்குவதற்காக தனியார் ஆய்வகங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள அரசின் இந்த முடிவு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...