கோவை: கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்ய இரண்டு தனியார் ஆய்வகங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இரண்டு ஆய்வகங்களில் ஒன்றாக கோவையில் உள்ள மைக்ரோபயாலஜி நுண்ணுயிரியல் ஆய்வகத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மற்றொரு சோதனை ஆய்வகம் சென்னையில் உள்ள YRG ஆய்வக்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை:கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்ய இரண்டு தனியார் ஆய்வகங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பரிசோதனையானது சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் வைத்து பரிசோதிக்கப்பட்டு வந்தது. இது கால விரயத்தை ஏற்படுத்துவதால் கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக கொரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்ய இரண்டு தனியார் ஆய்வகங்களுக்கு தமிழக அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.
இரண்டு ஆய்வகங்களில் ஒன்றாக கோவையில் உள்ள மைக்ரோபயாலஜி நுண்ணுயிரியல் ஆய்வகத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மற்றொரு சோதனை ஆய்வகம் சென்னையில் உள்ள YRG ஆய்வக்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கோவை மைக்ரோபயாலஜி நுண்ணுயிரியல் ஆய்வக உயர்
அதிகாரியிடம் பேசும் போது, பரிசோதனை செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் ஓரிரு நாட்களில் பணிகள் நிறைவடைந்து கொரோனா பரிசோதனை செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.
மேலும், பரிசோதனைக்கு வருவதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் ஆய்வகத்தை தொடர்பு கொண்டு வர வேண்டும் என்றனர்.
அதேசமயம், இந்த சோதனைக்கான செலவு குறித்து தகவல் தெரிவிக்கப்படாத நிலையில், அது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட செலவில் அல்லது இணையாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சோதனைக்கான செலவுகள் குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் இரத்த மாதிரிகள் நுண்ணுயிரியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் அல்லது ஆர்.எஸ்.புரம் தலைமையகத்தில் சேகரிக்கப்படும். இதனை தொடர்ந்து, இரத்த மாதிரிகள் பரிசோதனை முடிவுகளுக்காக நிறுவனத்தின் வீரகேரளம் செயலாக்க மையத்திற்கு அனுப்பப்படும்.
தொடர்ந்து, வீரகேரளம் செயலாக்க மையத்தில் பரிசோதனைக்காக பெறப்பட்ட இரத்த மாதிரிகளின் முடிவுகள் 5 அல்லது 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கும் அரசு பரிசோதனை மையத்தின் பணிச்சுமையை எளிதாக்குவதற்காக தனியார் ஆய்வகங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள அரசின் இந்த முடிவு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.