கோவை: கொரோனா வைரஸ் பாதிப்பு அவசரகால நிலையில் அரசுக்கு நிவாரண பணிகள் மேற்கொள்ள தங்களால் முடிந்த பங்களிப்பை பகிர்ந்து கொள்ளலாம் என மத்திய மாநில அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு தொழில் துறையினர் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் 1992-1995 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களது பங்களிப்பாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சி தலைவர் கு.ராஜாமணியிடம், 92-95ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில் காசோலை வழங்கபட்டது.

அப்போது முன்னாள் மாணவர் சங்க தலைவர் மகேந்திரன், பொருளாளர் ஆடிட்டர் காமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மயூரா ஜெயக்குமார், கூறுகையில்:-
கொரோனா தாக்கம் உலகளவில் மிக பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அரசின் சுமையை பொது அமைப்புகள் அதிகம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக பி.எஸ்.ஜி கலை அறிவியல் முன்னாள் கல்லூரி மாணவர்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளோம்.
அனைத்து அமைப்புகளும் சமுதாய பணியை மேற்கொண்டு தங்களது பங்களிப்பை வழங்கிட முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.