கொரோனா நிவாரண பணிக்கு கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி!

கோவை: கொரோனா வைரஸ் பாதிப்பு அவசரகால நிலையில் அரசுக்கு நிவாரண பணிகள் மேற்கொள்ள தங்களால் முடிந்த பங்களிப்பை பகிர்ந்து கொள்ளலாம் என மத்திய மாநில அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு தொழில் துறையினர் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

கோவை: கொரோனா வைரஸ் பாதிப்பு அவசரகால நிலையில் அரசுக்கு நிவாரண பணிகள் மேற்கொள்ள தங்களால் முடிந்த பங்களிப்பை பகிர்ந்து கொள்ளலாம் என மத்திய மாநில அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு தொழில் துறையினர் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் 1992-1995 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களது பங்களிப்பாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சி தலைவர் கு.ராஜாமணியிடம், 92-95ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில் காசோலை வழங்கபட்டது.



அப்போது முன்னாள் மாணவர் சங்க தலைவர் மகேந்திரன், பொருளாளர் ஆடிட்டர் காமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மயூரா ஜெயக்குமார், கூறுகையில்:-

கொரோனா தாக்கம் உலகளவில் மிக பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அரசின் சுமையை பொது அமைப்புகள் அதிகம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக பி.எஸ்.ஜி கலை அறிவியல் முன்னாள் கல்லூரி மாணவர்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளோம். 

அனைத்து அமைப்புகளும் சமுதாய பணியை மேற்கொண்டு தங்களது பங்களிப்பை வழங்கிட முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...