கோவை கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக பயன்படுத்துக் கொள்ளலாம் - பொங்கலூர் பழனிச்சாமி

கோவை: கோவையில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மையமாக கோவை கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தி.மு.க சொத்து பாதுகாப்பு குழு தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருக்கு கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மையமாக கோவை கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தி.மு.க சொத்து பாதுகாப்பு குழு தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருக்கு கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் தி.மு.க சொத்து பாதுகாப்பு குழு தலைவருமான பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாவட்டத்தில், பள்ளபாளையம் பகுதியில் உள்ள கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியை கொரோனா சிகிச்சைக்காக தனிமைப்படுத்தும் மையமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மேலும், அக்கடிதத்தில், கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட இந்த கல்லூரியில் 250 ஹாஸ்டல் அறைகளுடன் 800 கட்டில்களுடன் உள்ளதாகவும்,15,000 சதுர அடி கொண்ட ஆடிட்டோரியம், அதே அளவு கொண்ட சமையல் கூடம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

எனவே, இதனை கொரோனா நோயாளிக்கு சிகிச்சைக்கான தனிமைப்படுத்தும் மையங்களாக தாராளமாக உபயோகித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...