கோவை: கோவை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட காவல்துறை என போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 638 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட காவல்துறை என போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 638 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரில் 144 தடை உத்தரவை மீறியதாக 144 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 43 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல, கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் 494 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 833 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 330 மோட்டார் சைக்கிள்கள், 1 கார், 1 மினி லோடு வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இப்படி, கோவை மாநகர காவல் எல்லை மற்றும் மாவட்ட காவல் எல்லை என மொத்தமாக கோவையில் 638 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல 373 மோட்டார்சைக்கிள்கள், 1 கார், ஒரு 1மினி லோடு வேன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.