கோவை: தமிழக அரசின் கொரோனா நிவாரணப்பொருள்களை நியாய விலைக்கடைகளின் மூலம் பெறுவதற்கான டோக்கன்கள் தருவதாக வந்த தகவலையடுத்து கோவை ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. சமூக விலகலை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துவருகிறது.

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஊரடங்கு மற்றும் சமூக விலகல் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்க கூடிய நிலையில் அதனை பல்வேறு இடங்களில் தகர்ந்துவருகின்றனர் மக்கள். அதே போன்ற நிலை தான் இன்று கோவையிலும் அரங்கேறியது.
கொரோனா நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்கள் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து இதற்கான டோக்கன்கள் கோவை ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியில் இன்று அதிமுகவினர் ரேசன் அட்டை வைத்திருக்கும் பயனாளிகளுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இதனைத் தொடர்ந்து ரத்தினபுரி பள்ளியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று பள்ளி முன்பாக குவிந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

கொரோனாவிற்கு சமூக விலகல் முக்கியமான நிலையில், அதனை கருத்தில் கொள்ளாமல் மக்கள் ஒரே இடத்தில் கூடியது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இதுக்குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவித்ததை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த அதிகாரிகள், ரேசன் அட்டை வைத்துள்ள 100 பேருக்கு மட்டுமே தினமும் டோக்கன் வழங்கப்படும் என தெரிவித்தனர். அனைத்தும் பயனாளிக்கும் வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினர்.
சமூக விலகலை முறையாக கடைப்பிடித்து கொரோனாவினை தடுக்கும் கடமை மக்களுக்கு உள்ள நிலையில் இது போன்ற அலட்சியமான விஷயங்களை மேற்கொள்ள கூடாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.