கோவையில் தடையை மீறி தொழுகை செய்த பள்ளிவாசல்களின் தலைவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

கோவை: கோவையில் 144 தடையை மீறி தொழுகையை ஒருங்கிணைத்ததாக மசூதிகளின் தலைவர் மற்றும் செயலாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் 144 தடையை மீறி தொழுகையை ஒருங்கிணைத்ததாக மசூதிகளின் தலைவர் மற்றும் செயலாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து மத்திய மாநில அரசுகள் 144 தடை விதித்து பொதுமக்கள் ஒன்று கூடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இதை தொடர்ந்து அனாவசியமாக சாலைகளில் பயணிப்பவர்கள் ஒன்றுகூடுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக, பொது இடங்களில் 5 பேருக்கு மேல் ஒன்று கூட கூடாது வாகனங்களில் வீதிகளில் வலம் வரக்கூடாது பொதுமக்கள் வீட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கோவை உக்கடம் காவல் எல்லைக்குட்பட்ட இரண்டு பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதைத்தொடர்ந்து தகவலறிந்த உக்கடம் போலீசார் தொழுகைக்கு ஏற்பாடு செய்த பள்ளிவாசல் தலைவர் மற்றும் செயலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மதிய நேரத்தில் தொழுகை மேற்கொண்டதாக கோவை உக்கடம் அருகே உள்ள பெரிய பள்ளிவாசலின் தலைவர், செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழும், மீண்டும் மாலைநேரத்தில் ஒன்று கூடியதாக மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல உக்கடம் காவல் எல்லைக்குட்பட்ட சின்ன பள்ளிவாசலின் தலைவர் மற்றும் செயலாளர் மீதும் 4 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...