குன்னூரில் காவல்துறையினர் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காத பொதுமக்கள்..! காற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு சட்டம்!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் காவல்துறையினர் எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்காததால் 144 தடை உத்தரவு காற்றில் பறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் காவல்துறையினர் எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்காததால் 144 தடை உத்தரவு காற்றில் பறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

நீலகிரி மாவட்டம் உதகையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பேருந்து நிலையம், சாந்தி விஜயா பள்ளி மைதானம் மற்றும் ஏடிசி மைதானம் என்ற மூன்று இடங்களை மாவட்ட நிர்வாகம் அமைத்து தந்த நிலையி்ல், குன்னூரில் பேருந்து நிலையத்தை ஒட்டி ஒரு இடம் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கூடும் நூற்றுக்கணக்கான பாெதுமக்கள் இடைவெளி விட்டு பாெருட்களை வாங்க இயலாத காரியமாக உள்ளது.



இதேபோல, ஆங்காங்கே அரசியல் பிரமுகர்களும் ஆய்வு செய்வதாக கூறி கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இவர்களை கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் தயக்கம் காட்டி வருகின்றனர். 



தனித்திருப்பதன் முக்கியத்துவத்தை இன்னும் முறையாக பின்பற்றாததால் காெராேனா வைரஸ் தாெற்று ஏற்படும் சூழல் நிலவுவதால், அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கு வழங்க பல்வேறு வாகன ஓட்டிகள் முன் வரும் நிலையில், அவர்களை ஊக்குவித்து ஒவ்வொரு கிராம பகுதிகளுக்கும் சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...