கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேலும் ரூ.50 லட்சம் நிதியுதவி ஒதுக்கீடு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளதாக பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேற்கண்ட சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொரோனா வைரஸ் (கோவிட் 19) பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்கிக் கொள்வதற்கு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஏற்கனவே ரூ. 50 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், மேலும் ஐம்பது லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வதாக கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மடத்துக்குளம், உடுமலை பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள பொள்ளாச்சி, வால்பாறை, தொண்டாமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளில் கொரோனா வைரஸ் (கோவிட் 19) பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் வழங்க உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமென தெரிவித்தார்.
மேலும், ஆனைமலை பகுதியில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட இருவர் சார் ஆட்சியர் தலைமையில் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.