பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அரசு மருத்துவமனைகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேலும் ரூ.50 லட்சம் நிதியுதவி - சண்முகசுந்தரம் எம்.பி

கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேலும் ரூ.50 லட்சம் நிதியுதவி ஒதுக்கீடு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளதாக பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேலும் ரூ.50 லட்சம் நிதியுதவி ஒதுக்கீடு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளதாக பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேற்கண்ட சட்டமன்ற தொகுதிகளில்‌ அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொரோனா வைரஸ்‌ (கோவிட்‌ 19) பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்கள்‌ மற்றும்‌ மருந்துகள்‌ வாங்கிக்‌ கொள்வதற்கு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஏற்கனவே ரூ. 50 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், மேலும் ஐம்பது லட்சம்‌ ரூபாய் ஒதுக்கீடு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வதாக கூறியுள்ளார்.

திருப்பூர்‌ மாவட்டத்தில்‌ அமைந்துள்ள மடத்துக்குளம்‌, உடுமலை பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும்‌ கோவை மாவட்டத்தில்‌ அமைந்துள்ள பொள்ளாச்சி, வால்பாறை, தொண்டாமுத்தூர்‌ மற்றும்‌ கிணத்துக்கடவு தொகுதிகளில்‌ கொரோனா வைரஸ்‌ (கோவிட்‌ 19) பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க அரசு பொது மருத்துவமனையில்‌ மருத்துவ உபகரணங்கள்‌ வழங்க உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமென தெரிவித்தார். 

மேலும், ஆனைமலை பகுதியில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட இருவர் சார் ஆட்சியர் தலைமையில் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...