கோவையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட சம்பவம்: ஹிந்து முன்னணியை சேர்ந்த இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை: கோவை காட்டூர் அருகே எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரில் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கோவை: கோவை காட்டூர் அருகே எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரில் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கோவை காட்டூர்  பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் இக்பால் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். தடுக்க சென்ற ஷாஜகான் என்பவரும் காயம் அடைந்தார். காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் உதவி ஆணையாளர் கார்த்திகேயன் ஆய்வாளர், லதா தலைமையிலான காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்து முன்னணி நகர செயலாளர் சதீஷ் கண்ணன், ராகுல், வினீஷ், மதியழகன் என்ற மில்லர், ஆகியோர் இரும்பு பைப்பால் தாக்கியுள்ளது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து 4 பேரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது கோவை மாநகர காவல் ஆணையர், சிறையிலுள்ள சதீஷ் கண்ணன் மற்றும் வினீஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். 

இதைத் தொடர்ந்து இரண்டு நபர்களுக்கும் கோவை மத்திய சிறையில் வைத்து தடுப்புக்காவல் ஆணை சார்பு செய்யப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...