கோவை: கோவை காட்டூர் அருகே எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரில் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கோவை காட்டூர் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் இக்பால் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். தடுக்க சென்ற ஷாஜகான் என்பவரும் காயம் அடைந்தார். காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் உதவி ஆணையாளர் கார்த்திகேயன் ஆய்வாளர், லதா தலைமையிலான காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்து முன்னணி நகர செயலாளர் சதீஷ் கண்ணன், ராகுல், வினீஷ், மதியழகன் என்ற மில்லர், ஆகியோர் இரும்பு பைப்பால் தாக்கியுள்ளது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 4 பேரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது கோவை மாநகர காவல் ஆணையர், சிறையிலுள்ள சதீஷ் கண்ணன் மற்றும் வினீஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து இரண்டு நபர்களுக்கும் கோவை மத்திய சிறையில் வைத்து தடுப்புக்காவல் ஆணை சார்பு செய்யப்பட்டது.