திருப்பூர் மாவட்டத்தில் 86 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் 7 வெண்டிலேட்டர் உட்பட 86 வென்டிலேட்டர்கள் மாவட்டத்தில் தயார் நிலையில் இருப்பதாக அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் 7 வெண்டிலேட்டர் உட்பட 86 வென்டிலேட்டர்கள் மாவட்டத்தில் தயார் நிலையில் இருப்பதாக அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கொரோணா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை பணிகள் திருப்பூரில் திறம்பட செய்து வருவதாகவும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 15 படுக்கைகளுடன் சிகிச்சைக்கான மையம் தயார் நிலையில் இருப்பதாகவும், அரசு மருத்துவமனையில் ஏழு வெண்டிலேட்டர்களும் மாவட்டத்தின் தனியார் மருத்துவமனைகளில் 79 வெண்டிலட்டர் என 86 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் வைத்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும், மாவட்டத்தின் அவிநாசி, உடுமலை உள்ளிட்ட அனைத்து தாலுகாவிலும் கொரோனா வார்டுகள் உருவாக்கப்பட இருப்பதாகவும், திருப்பூரில் 6 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் லண்டனில் இருந்து திரும்பிய ஒருவருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரும் தற்போது கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...