கோவையில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்..! போலீசார் மீட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் மருத்துவமனையில் இருந்து தப்பித்து பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து மீண்டும் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் மருத்துவமனையில் இருந்து தப்பித்து பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து மீண்டும் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

வட மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் கொரோனா அறிகுறியுடன் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் மாயமானார்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் சுற்றுவட்டாரம் முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையிலான போலீசார் சுற்றுவட்டாரம் முழுவதும் வலைவீசி தேடி வந்தனர்.



இந்த நிலையில், வசந்தா மில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் அந்தப்பெண் மறைந்து இருந்தது தெரியவந்தது. 



பின்னர் போலீசார் அவரை பிடித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு மீண்டும் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...