கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா தடுப்பு முன்னெரிக்கை நடவடிக்கையில் நகராட்சிக்கு உதவிட தன்னார்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா தடுப்பு முன்னெரிக்கை நடவடிக்கையில் நகராட்சிக்கு உதவிட தன்னார்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வால்பாறை கால்பந்து குழுவினர் 20 பேர் வால்பாறை நகராட்சி ஆணையர் பவன்ராஜை சந்தித்து தற்போது நடைபெற்று வரும் கொரானா தடுப்பு நடவடிக்கைக்கு தாங்கள் கலந்து கொண்டு உதவிட விரும்புவதாக கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நகராட்சி ஆணையர் அவர்கள், செயல்படும் விதம் தேயிலை தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களிடம் கொரானா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அந்தந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி பணியாளர்களுடன் இணைந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும், யாரும் கொரானா அறிகுறிகளுடன் உள்ளனரா என்று கண்டறிந்து தகவல் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும் தன்னார்வலர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், அவர்களுக்கு முக கவசம் மற்றும் பாதுகாப்பு கையுறை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆணையாளர் பவன்ராஜ் அம்மா உணவகத்தை திடீரென பார்வையிட்டார். அங்குள்ள பணியாளர்களிடம் அம்மா உணவகத்தில் உணவு வகைள் சுகாதாரமாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தொடர்ந்து மதிய உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜான்சன், மேற்பார்வையாளர் சிவகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.