சென்னை: வெளிநாட்டிலிருந்து வந்த சுமார் 54,000 பேர்களின் பட்டியல் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: வெளிநாட்டிலிருந்து வந்த சுமார் 54,000 பேர்களின் பட்டியல் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகம் முழுவதும் உள்ள 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்புகளையும் இதன் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்தியாவில் பொது மக்கள் நடமாட்டத்தை குறைக்க மத்திய அரசு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து வந்த சுமார் 54,000 பேர்களின் பட்டியல் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தவும், அவர்கள் வெளியே வராதவாறு தீவிரமாக தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதேபோல காய்கறிகள், பழங்கள், முட்டைகள் போன்ற விளை பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பிற நபர்களுக்கும் தேவையான அனுமதி சீட்டை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கால்நடை, கோழி, மீன், முட்டை, கால்நடை தீவனம் ஆகியவற்றின் நகர்வுகளும் அனுமதிக்கப்படுகிறது எனவும் இதில் சிரமங்கள் ஏதும் இருந்தால் காவல்துறை தலைமையக கட்டுப்பாட்டு அறையை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்கள் : 044-28447701, 044-28447703
இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட வீடு, ஸ்டிக்கர் ஒட்டப்படும் வீடுகள், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வசிப்பவை என்றும் இவர்கள் 28 நாட்கள் சமுதாய விலகலுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வதந்திகளை நம்பி இந்த வீடுகளில் உள்ளோரை வருத்தமடைய செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.