வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 54,000 பேரின் பட்டியல்‌ மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைப்பு..! வீடுகளில் தனிமைப்படுத்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

சென்னை: வெளிநாட்டிலிருந்து வந்த சுமார்‌ 54,000 பேர்களின்‌ பட்டியல்‌ மாவட்ட ஆட்சியர்களிடம்‌ வழங்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை அவரவர்‌ வீடுகளிலேயே தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


சென்னை: வெளிநாட்டிலிருந்து வந்த சுமார்‌ 54,000 பேர்களின்‌ பட்டியல்‌ மாவட்ட ஆட்சியர்களிடம்‌ வழங்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை அவரவர்‌ வீடுகளிலேயே தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகம் முழுவதும் உள்ள 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்புகளையும் இதன் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்தியாவில் பொது மக்கள் நடமாட்டத்தை குறைக்க மத்திய அரசு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து வந்த சுமார்‌ 54,000 பேர்களின்‌ பட்டியல்‌ மாவட்ட ஆட்சியர்களிடம்‌ வழங்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை அவரவர்‌ வீடுகளிலேயே தனிமைப்படுத்தவும்‌, அவர்கள்‌ வெளியே வராதவாறு தீவிரமாக தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அதேபோல காய்கறிகள்‌, பழங்கள்‌, முட்டைகள் போன்ற விளை பொருட்களை உற்பத்தி செய்யும்‌ விவசாயிகளுக்கும் பிற நபர்களுக்கும் தேவையான அனுமதி சீட்டை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க வேண்டும்‌ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

மேலும், கால்நடை, கோழி, மீன்‌, முட்டை, கால்நடை‌ தீவனம்‌ ஆகியவற்றின்‌ நகர்வுகளும்‌ அனுமதிக்கப்படுகிறது எனவும் இதில்‌ சிரமங்கள்‌ ஏதும்‌ இருந்தால்‌ காவல்துறை தலைமையக கட்டுப்பாட்டு அறையை 24 மணி நேரமும்‌ தொடர்பு கொள்ளலாம் என தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொலைபேசி எண்கள்‌ : 044-28447701, 044-28447703

இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட வீடு, ஸ்டிக்கர்‌ ஒட்டப்படும்‌ வீடுகள்‌, வெளிநாடுகளில்‌ இருந்து திரும்பியவர்கள்‌ வசிப்பவை என்றும் இவர்கள்‌ 28 நாட்கள்‌ சமுதாய விலகலுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிப்பில்‌ உள்ளதாக தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வதந்திகளை நம்பி இந்த வீடுகளில்‌ உள்ளோரை வருத்தமடைய செய்ய வேண்டாம்‌ என கேட்டுக்கொண்டுள்ளார். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...