கோவையில் காந்திபுரம், உக்கடம், சாய்பாபா காலனி பேருந்து நிலையங்களில் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு - மாவட்ட ஆட்சியர்

கோவை: கோவையில் நெருக்கடி இருக்கும் மார்கெட்டுகளை பிரித்து காந்திபுரம் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், சாய்பாபா காலனி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.


கோவை: கோவையில் நெருக்கடி இருக்கும் மார்கெட்டுகளை பிரித்து காந்திபுரம் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், சாய்பாபா காலனி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் இன்று முதல் மீண்டும் காய்கறி விற்பனையானது பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் துவங்கியது. இந்த பணியை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

பொதுமக்கள் காய்கறிகள் வாங்குவதற்கு ஏற்றபடி இடைவெளி விட்டு கட்டங்கள் வரையப்பட்டுள்ளது. உழவர் சந்தைக்கு வரும் மக்கள் முககவசம் அணியும் படி காவல் துறையால் அறிவுறுத்தப்பட்டனர். சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நின்று பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். உழவர் சந்தையை பார்வையிட்ட பின்னர் மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கூடிய நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் வைரஸ் அறிகுறி இருப்பவர்கள் அடையாளம் கண்டு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சோதித்து வருவதாக தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் பொருளை விற்பவர், வாங்குவருக்கு இடையில் இடைவெளி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், காய்கறி, மளிகை கடைக்கு நேரம் கிடையாது எனவும் இவற்றை காவல் துறை, மாநகராட்சி கண்காணித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

அதேபோல, கோவையில் நெருக்கடி இருக்கும் மார்கெட்டுகளை பிரித்து காந்திபுரம் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், சாய்பாபா காலனி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆட்சியர் ராசாமணி தெரிவித்த மாவட்ட ஆட்சியர் இதன் மூலம் 144 முறையாக அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...