கோவை: கோவையில் நெருக்கடி இருக்கும் மார்கெட்டுகளை பிரித்து காந்திபுரம் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், சாய்பாபா காலனி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.
கோவை: கோவையில் நெருக்கடி இருக்கும் மார்கெட்டுகளை பிரித்து காந்திபுரம் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், சாய்பாபா காலனி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் இன்று முதல் மீண்டும் காய்கறி விற்பனையானது பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் துவங்கியது. இந்த பணியை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
பொதுமக்கள் காய்கறிகள் வாங்குவதற்கு ஏற்றபடி இடைவெளி விட்டு கட்டங்கள் வரையப்பட்டுள்ளது. உழவர் சந்தைக்கு வரும் மக்கள் முககவசம் அணியும் படி காவல் துறையால் அறிவுறுத்தப்பட்டனர். சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நின்று பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். உழவர் சந்தையை பார்வையிட்ட பின்னர் மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கூடிய நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் வைரஸ் அறிகுறி இருப்பவர்கள் அடையாளம் கண்டு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சோதித்து வருவதாக தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் பொருளை விற்பவர், வாங்குவருக்கு இடையில் இடைவெளி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், காய்கறி, மளிகை கடைக்கு நேரம் கிடையாது எனவும் இவற்றை காவல் துறை, மாநகராட்சி கண்காணித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
அதேபோல, கோவையில் நெருக்கடி இருக்கும் மார்கெட்டுகளை பிரித்து காந்திபுரம் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், சாய்பாபா காலனி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆட்சியர் ராசாமணி தெரிவித்த மாவட்ட ஆட்சியர் இதன் மூலம் 144 முறையாக அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.