உதகையில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை - மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ள ஏழு பேரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் கொராேனா தொற்று இல்லை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ள ஏழு பேரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் கொராேனா தொற்று இல்லை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

"தமிழக முதல்வர் அறிவுரைப்படி சந்தை மட்டும் மார்க்கெட் பகுதிகளில் அதிகமாக மக்கள் கூடாத வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் உதகையில் சாந்தி விஜயா மைதானம் மற்றும் பஸ் நிலையம் ஆகிய இடங்கள் காய்கறிகள் வழங்கும் கடைகளாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அதேபோல், மக்களின் நடமாட்டத்தை குறைக்க அரசு கூட்டுறவுத்துறை உழவர் சந்தை ஆய்வேட்டில் சார்பாக வாகனங்களில் காய்கறிகளை அந்தந்த இடங்களிலேயே கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது எனவும் பொதுமக்கள் அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவை மீறக்கூடாது என்றும் தீயணைப்புத்துறை வாகனங்கள் மூலம் மக்கள் நடமாடும் பகுதிகளில் கிருமிநாசினி தெறிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

மேலும், 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார். தனியார் துறை சார்பில் 68 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பொருட்கள் தடையில்லாமல் கிடைக்கும் என்று தெரிவித்த அவர், நீலகிரி மாவட்டத்தில் 732 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர்கள் வெளியில் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். 

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ள ஏழு பேரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் கொராேனா தொற்று இல்லை என்றார். 

வெளிநாட்டிலிருந்து வந்த 147 பேர் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், 144 தடை உத்தரவை மீறியதாக 91 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...